பிரேசிலில் 24 மணி நேரத்தில் 57,736 பேர் கரோனாவால் பாதிப்பு

பிரேசிலில் 24 மணி நேரத்தில் 57,736 பேர் கரோனாவால் பாதிப்பு
Updated on
1 min read

பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,736 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1,556 பேர் பலியாக இதுவரை பிரேசிலில் 5,37,394 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in