காரைக்காலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் கையெழுத்து பிரச்சாரம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி காரைக்காலில் கையெழுத்து பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி காரைக்காலில் கையெழுத்து பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஜூலை 10) கையழுத்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காரைக்கால் தெற்கு தொகுதி காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வலியுறுத்தியும், தோமாஸ் அருள் வீதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெற்றனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் மோகனவேல், துணைத் தலைவர்கள் பஷீர், பாஸ்கரன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் ஜெ.சிவகணேஷ், கருணாநிதி, வட்டாரத் தலைவர்கள் பிரகாஷ், முஜ்புர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in