Published : 05 Jul 2021 01:48 PM
Last Updated : 05 Jul 2021 01:48 PM

ஜப்பானில் நிலச்சரிவு; 3 பேர் பலி: பலர் மாயம்

ஜப்பானில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 200 பேர்வரை மாயமாகியுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “டோக்கியோவிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜப்பானின் மத்தியப் பகுதி நகரமான அட்டாமி நகரில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதில் வார இறுதியில் (சனிக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். இந்த நிலச்சரிவில் 100க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 200க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

— PM Breaking News (@PMBreakingNews) July 3, 2021

இம்மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை ஜப்பான் சந்தித்து வருகிறது.

கரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. இந்த நிலையில் கரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி ஜப்பானில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x