கட்டுப்பாடுகளுக்குத் தயாராகும் இந்தோனேசியா

கட்டுப்பாடுகளுக்குத் தயாராகும் இந்தோனேசியா
Updated on
1 min read

இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி உள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. அலுவலகங்களில் பணியாளர்களைக் குறைத்தல், மத வழிபாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. தடுப்பூசி செலுத்தப்படுவது தீவிரப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் நேற்று மட்டும் 13,737 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் இதுவரை 8% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in