காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காரைக்காலில் கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா.
காரைக்காலில் கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா.
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபெறும் கரோனா தடுப்பூசி திருவிழாவை, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா இன்று (ஜூன் 16) தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, திருநள்ளாறு சமுதாய நலவழி மையம், மாவட்டத்தில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட வழக்கமாகத் தடுப்பூசி போடப்படும் 13 மையங்களிலும், இவை அல்லாமல் கூடுதலாக 14 மையங்களிலும் கரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. கூடுதலாக அமைக்கப்படும் 14 மையங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்படுகின்றன.

காரைக்கால் அம்மையார் கோயில் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இம்முகாமில் 18 முதல் அனைத்து வயதினருக்கும், ஆன்லைன் மூலம் பதிவு செய்யாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in