

மெக்சிகோவில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சமாக இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதார துறை தரப்பில், “ மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,282 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 243 பேர் பலியாகி உள்ளனர். மெக்சிகோவில் 24,48,820 இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,29,823 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
தென் அமெரிக்க நாடுகளில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறன.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.