

ராமநாதபுரத்தில் ‘கரோனாவை விரட்ட குறி சொல்லும் நவீன கருப்பசாமி’ என்ற கரோனா விழிப்புணர்வு குறுநாடகம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இன்று மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பும் ஒருங்கிணைந்து lநடத்திய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) எம்.பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், சார் ஆட்சியர் சுகபுத்ரா, டிஎஸ்பி வெள்ளைத்துரை, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கரோனாவை விரட்ட குறி சொல்லும் நவீன கருப்பசாமி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறுநாடகம் நடத்தப்பட்டது.
இதில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவம், முகக்கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை சுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.