

தமிழகத்தில் கரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று பாஜக சட்டப்பேரவை குழு தலைவரும், கட்சியின் மாநில துணை தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார்.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் தனியார் வழங்கிய முககவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்களை அவர் இன்று வழங்கினார்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் அவற்றை பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார்நாகேந்திரன், கரோனா பேரிடர் காலத்தில் தற்போதைய சூழலில் தமிழக அரசு அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.