

கரோனா காரணமாக ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஜப்பானில் 2019ஆம் ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 2.8% குறைந்துள்ளது. 1899ஆம் ஆண்டு முதல் பிறப்பு விகிதக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் 2020-ல் தான் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் இவ்வளவு குறைந்ததற்கு கரோனா தொற்றே காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே ஜப்பானில் திருமணங்கள் குறைந்து வருவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜப்பானில் 2,595 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பானில் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட, 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.