சிவகங்கையில் கரோனா உதவி மையத்தை தொடங்கிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திறக்கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு உதவி மையம்.
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திறக்கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு உதவி மையம்.
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் கரோனா கட்டுப்பாட்டு உதவி மையம் திறக்கப்பட்டது.

மாவட்டத் தலைவர் ரபீக்முகமது தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் அன்புகுளோரியா, அரசு மருந்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கித் தலைமை மருந்துவர் வசந்த், தவ்ஹித் ஜமாஅத் மாவட்டச் செயலாளர் சாகுல், பொருளாளர் தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த உதவி மையம் மூலம் கரோனா பாதித்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், நோய் குறித்த விழிப்புணர்வு, பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடத்துதல், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தருதல், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டோருக்கு உணவு, நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல், இறந்தவர்களை அடக்கம் செய்தல், மருந்து உபகரணங்கள் கிடைக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in