Last Updated : 02 Jun, 2021 08:18 PM

 

Published : 02 Jun 2021 08:18 PM
Last Updated : 02 Jun 2021 08:18 PM

சிறு, குறு விவசாயிகள் 7000 பேருக்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலம் இலவசமாக கோடை உழவு

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கினை முன்னிட்டு,பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் 2 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு இலவசமாக கோடை உழவு செய்து தர தமிழ்நாடு வேளாண்துறையும் தனியார் டிராக்டர் தயாரிப்பு நிறுவனமும் களம் இறங்கியுள்ளன.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேலதுலுக்கன் குளம் கிராமத்தில் இந்த திட்டத்தை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் இன்று தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் 6 டிராக்டர்களை கொண்டு நவீன முறையில் கோடை உழவு பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இலவச கோடை உழவுப்பணியை ஏற்பாடு செய்த தன்னார்வலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், கரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வித வருமானமும் இல்லாமல் உழவு பணிகூட செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசும், டிராக்டர் நிறுவனமும் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றன. கடந்தாண்டு மாவட்டத்தில் 8 ஆயிரம் ஏக்கர் இலவசமாக உழுது கொடுக்கப்பட்டது. நடப்பாண்டு 50 டிராக்டர்கள் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் உழுது கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கோடை இலவச உழவு வேண்டும் விவசாயிகள் 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பெயர்பதிவு செய்து கொண்டால் இரு நாட்களில் அவர்களின் நிலம் உழவு செய்து கொடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x