

தருமபுரி மாவட்டத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இன்று (19.05.2021) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தருமபுரி மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றி வந்த கார்த்திகா வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த திவ்யதர்ஷினி, தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (மே.19) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
''முதல் கட்டமாக கரோனா தடுப்பு மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான பணிகள் விரைவுபடுத்தப்படும். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்று புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.