

கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க ராமேசுவரத்தில் பாஜக சார்பாக 28 இடங்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதன் பிரசாதம் முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மக்கள் கரோனாவில் இருந்து விடுபட வேண்டி ராமேசுவரத்தில் பாஜக மற்றும் ராமேசுவரம் பிராமண சங்கம் சார்பாக 28 இடங்களில் வேத பண்டிதர்கள் வீடுகளில் தன்வந்திரி யாகம், அங்காரகன் யாகம் , மிருத்தியுஞ்ஜய யாகம் ஆகியவை நடைபெற்றது.
இந்த யாகம் செய்த பிரசாதம் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் , அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.