அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published on

அரக்கோணம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம் நகரில் இருபிரிவு இளைஞர்கள் இடையே கடந்த மாதம் 7-ஆம் தேதி இரவு ஏற்பட்ட மோதலில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன்(25), செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அரக்கோணம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த சத்யா (24), அஜித் (24), மதன் (37), சுரேந்தர் (19), நந்தா (20), சூர்யா (23), சாலை கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (20), மேகவர்ணம் (23) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையில், பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவா (32), வேடல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23),ராஜசேகர் (28) ஆகியோர் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மதன், சுரேந்தர், சத்யா, அஜித், கார்த்தி, ராஜசேகர், சூர்யா ஆகிய 7 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் பரிந்துரையின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று (மே 7-ஆம் தேதி) உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in