அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு 

அசாமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு 
Updated on
1 min read

அசாமில் இன்று காலை 7.51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் வடகிழக்கு மாநிலங்களிலும், வடக்கு வங்காளத்திலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது அசாம் மாநிலத்தின் தேஜ்பூரிலிருந்து 43 கி.மீ தொலைவில் இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 17 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உருவானதாகவும் தேசிய நிலநடுக்க மையம் கண்டறிந்துள்ளது.

இதுவரை யாரும் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகாத நிலையில், விரிசல் ஏற்பட்ட கட்டிடங்களின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

அசாம் மாநில அமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நிலநடுக்க சேத புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in