இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சோகம் 

அம்சவள்ளி - திருவேங்கடம் | கோப்புப் படம்.
அம்சவள்ளி - திருவேங்கடம் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர் அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அம்மன்பேட்டை வெள்ளாளத் தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (80). இவரது மனைவி அம்சவள்ளி (78). கணவன்-மனைவி இருவரும் இணைபிரியாது வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக அம்சவள்ளி நேற்று மாலை உயிரிழந்தார். சோகத்தில் இருந்த அவரது கணவர் திருவேங்கடம் மிகுந்த கவலையுடன் அழுதுகொண்டே இருந்தார். தந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை என அவரது மகன்கள் பார்த்தபோது அவரும் இறந்தது தெரியவந்தது. இந்தத் தம்பதியர் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததைப் போல் இறப்பிலும் இணை பிரியவில்லை. இச்சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in