பாளை. மத்திய சிறையில் கைதிகளுக்கு இடைய மோதல்: ஒருவர் பலத்த காயம்

பாளை. மத்திய சிறையில் கைதிகளுக்கு இடைய மோதல்: ஒருவர் பலத்த காயம்
Updated on
1 min read

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த முத்துமனோ (27) என்பவர் வெடிகுண்டு மற்றும் அரிவாள் வைத்திருந்ததாக கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டுதிருவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேற்று அவர் மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மத்தி சிறைக்குள் இன்று கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சககைதிகள் தாக்கியதில் முத்துமனோவுக்கு தலைமையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in