தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன? 

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன? 
Updated on
1 min read

சில நாட்களாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பவுனுக்கு 208 ரூபாய் அதிகரித்து விற்பனை ஆகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 உயர்ந்து ரூ.4,537க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.36,296க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39,168க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 1.60 ரூபாய் அதிகரித்து ரூ.75.70க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,700 ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in