முகக்கவசம் அணியாவிட்டால் மது இல்லை: புதுச்சேரி கலால்துறை கெடுபிடி

புதுச்சேரி மதுக்கடைகள், சாராயக்கடைகளில் முககவசம் அணியாவிட்டால் மது இல்லை என்ற அறிவிப்பு.
புதுச்சேரி மதுக்கடைகள், சாராயக்கடைகளில் முககவசம் அணியாவிட்டால் மது இல்லை என்ற அறிவிப்பு.
Updated on
1 min read

மது வாங்க வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் மது இல்லை என்ற அறிவிப்புகள் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி கலால்துறை எச்சரித்துள்ளது.

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர், உரிமம் பெற்ற மது விற்பனையாளர்களுக்குப் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அதில் "மதுக்கடைகளில் மது வாங்க வருவோரும், விற்பனையாளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சானிடைசர்களைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

நெரிசலைக் கட்டுப்படுத்தத் தடுப்புகள் கட்டியிருக்க வேண்டும். அனைத்து உரிமதாரர்களும் இந்நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மதுக்கடைகள், சாராயக் கடைகளில் முகக்கவசம் அணியாவிட்டால் மது விற்பனை இல்லை என்ற அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கடைகளிலும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அடையாளங்களும் வரையப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in