

அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியில் ட்வீட் செய்துள்ள அவர், பாரத ரத்னா டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த ஜெயந்தியில் நான் அவருக்குத் தலைவணங்குகிறேன்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக அவர் நடத்திய போராட்டம் என்றென்றும் முன்னுதாரணமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார். சடட் வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார்.
1990ல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.