

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 102 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வட்டார அளவில் அம்பாசமுத்திரத்தில் 14 பேர், மானூரில் 19 பேர், நாங்குநேரியில் 9 பேர், பாளையங்கோட்டையில் 25 பேர், பாப்பாகுடியில் 7 பேர், ராதாபுரத்தில் 9 பேர், வள்ளியூரில் 20 பேர், சேரன்மகாதேவியில் 7 பேர், களக்காட்டில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.