திருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது

திருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தேர்தல் மோதலில் சிகிச்சையில் இருந்த அதிமுக பிரமுகர் தந்தை மரணமடைந்தார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மானாமதுரை தொகுதி திருப்புவனம் அருகே வயல்சேரியில் வாக்குப்பதிவு அன்று (ஏப்.6) திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் தரப்புக்கும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ஏப்.7-ம் தேதி இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் திமுக தரப்பில் சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோர் காயமடைந்தனர்.

அதேபோல் அதிமுக தரப்பில் ராமகிருஷ்ணன் தந்தை நாராயணன் (75), பிரவீன்குமார் ஆகியோர் காயமடைந்தனர். பழையனூர் போலீஸார் இருத்தரப்பிலும் 26 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காயமடைந்த நாராயணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுதொடர்பாக திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in