

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறும்போது, “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
இந்த கூட்டணி இந்திய மக்களை நேசிக்கிறது. திமுக கூட்டணி இந்திய மக்களுக்கு இடையே பிளவு ஏற்படக் கூடாது என்று கருதுகிறது. இக்கூட்டணி தமிழகத்தின் கலாச்சாரத்தை, பெருமையை நிலைநாட்ட நினைக்கிறது தமிழகத்தை தமிழகம்தான் ஆள வேண்டும், டெல்லி ஆளக் கூடாது என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்” என்றார்.
தமிழகம் முழவதும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 -ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.