எம்.பி ரவீந்திரநாத் கார் தாக்கப்பட்ட சம்பவத்தில் 17 பேர் மீது வழக்கு

எம்.பி ரவீந்திரநாத் கார் தாக்கப்பட்ட சம்பவத்தில் 17 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச்சாவடியை தேனி எம்.பி ரவீந்திரநாத் நேற்று ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது சிலர் அவரது கார்மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து கார் ஓட்டுநர் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பாண்டியன் (40) போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதில் எம்.பி ரவீந்திரநாத்தை சிலர் தாக்கி கொலை செய்ய முயன்றனர். தடுக்க முயன்ற என்னையும், பாதுகாவலர்களையும் தாக்க முயன்றதுடன், இரண்டு கார் கண்ணாடிகளையும் கல்வீசி சேதப்படுத்தினர் என்று தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, கார்த்திக் உள்ளிட்ட 17-பேர் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in