

தேனி அருகே பெரியகுளம் தொகுதிக்கு உள்பட்ட அன்னஞ்சியில், வாக்குச்சாவடி பிரிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் பொது மக்கள் வாக்களிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னஞ்சி, மேலத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், அதே பகுதியில் உள்ள கள்ளர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து வந்தனர்.
தற்போது நடைபெறும் தேர்தலில், இந்த வாக்குச்சாவடி, அதே ஊரில் இந்திரா நகர் காலனியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்னஞ்சி, மேலத்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்கச் செல்ல மறுத்து, சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் போலீஸார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.