எலெக்‌ஷன் கார்னர்: கோஸ்குண்டை க்ளோஸ் செய்த அண்ணாச்சி!

எலெக்‌ஷன் கார்னர்: கோஸ்குண்டை க்ளோஸ் செய்த அண்ணாச்சி!
Updated on
1 min read

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கோஸ்குண்டு சீனிவாசன், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறார். திமுக காரரான இவர், தனது மேலிட தொடர்புகளை வைத்து 2016-ல் சாத்தூர் தொகுதி சீட்டை வாங்கினார்.

ஆனால், இவர் வென்றால் அதே மேலிட தொடர்புகளை வைத்து அமைச்சர் பதவிக்கும் அடிப் போடுவார் என்பதால், கே.கே.எஸ்.எஸ்.ஆர். அண்ணாச்சி தரப்பு உள்ளிருந்தே சீனிவாசனின் வெற்றிக்கு உலைவைத்தது. இதையடுத்து 2019 இடைத் தேர்தலிலும் சீனிவாசனுக்கே சீட் கொடுத்தது திமுக. அப்போதும் 456 ஓட்டில் தோற்கடிக்கப்பட்டார் சீனிவாசன்.

இம்முறையும் தனக்கு சாத்தூர் கிடைக்கும் என நினைத்தாராம் சீனி. ஆனால், 2016-ல் மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் டாக்டர் ரகுராம் 20 ஆயிரம் வாக்குகள் பெற்ற புள்ளி விவரத்தை எடுத்துக் கொடுத்து, மதிமுகவுக்கு சாத்தூரைக் கேட்கும்படி வைகோவை கிளப்பி விட்டாராம் அண்ணாச்சி. அது வொர்க் அவுட்டாகிக் போனதால், சீனிவாசனுக்கு சீட் இல்லாமல் போய்விட்டது.

சாத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட போதும் சேப்பாக்கத்தையே சுற்றி வருகிறார் சீனிவாசன். ரகுராமின் வெற்றிக்கு சீனிவாசனின் தயவு தேவை என்பதால், அவரை வருந்தி அழைத்தது மதிமுக. ஆனால் அவரோ, “நான் வர ரெடி... ஆனா, நான் வருவதை சின்னத் தலைமை (அண்ணாச்சி) விரும்பாதே” என்று ஜகா வாங்கிவிட்டாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in