ஹாட் லீக்ஸ்: குக்கர் குறிவைக்கும் 40 தொகுதிகள்!

ஹாட் லீக்ஸ்: குக்கர் குறிவைக்கும் 40 தொகுதிகள்!
Updated on
1 min read

40 தொகுதிகளை குறிவைத்து காரியமாற்றும் தினகரன், அதில் 15 தொகுதிகளில் நம்மால் இரண்டாமிடத்தைப் பிடிக்க முடியும் என்கிறாராம். இதில் மூன்று தொகுதிகளில் வெற்றி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை என்பது தினகரனின் கணிப்பு என்கிறார்கள்.

இப்படியான களநிலவரத்தைத் தெரிந்து கொண்டவர், இறுதிச் சுற்றில் முன்னைக் காட்டிலும் வேகமாக பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இன்னொருபக்கம், அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதாக 'தொலை நோக்கு'த் திட்டத்துடன் அறிவித்த சின்னம்மா, கடந்த சில தினங்களாக ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.

போகுமிடமெல்லாம் அவரை அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வலியப் போய் சந்தித்தார்கள். அவர்களுக்கு எல்லாம் சிரித்த முகத்துடன் பிரசன்னம் வழங்கினார் சின்னம்மா. சித்தியிடமிருந்து கடைசி நேரத்தில் கரன்ஸி கட்டுகளும் கணிசமாக ரிலீஸானதால், குறிப்பிட்ட சில தொகுதி களில் அதிமுகவுக்கு நிகராக பணத்தை தாராளப்படுத்தி இருக்கிறாராம் தினகரன்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in