

தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகன், எப்படியும் வெற்றி பெறவேண்டும் என தீவிர முனைப்பு காட்டுகிறார். தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் வெளிப்படையாகவே பாஜக எதிர்ப்பைக் காட்டுவதால், இந்துக்கள் ஓட்டுகளை மட்டுமே நம்பிப் போராடுகிறார் முருகன்.
இதனால் களம் கடுமையானதால், முருகனால் மாநிலத்தின் மற்ற இடங்களுக்கு அசைய முடியவில்லை. மத்தியில் ஆளும் தேசியக் கட்சியின் மாநில தலைவர், இப்படி தனது தொகுதிக்குள்ளேயே முடங்கிப் போனது இந்தத் தேர்தலில் தான் நடந்திருக்கிறது.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.