

ஒரத்தநாட்டில் மீண்டும் போட்டியிடும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எப்பாடு பட்டாவது இம்முறையாவது ஜெயித்தாக வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறாராம். அதற்காக, அவர் வாக்குக் கேட்டுச் சென்ற இடமெல்லாம் தாராள கரன்சி மழை பொழிந்தது.
ஆரத்தி தட்டுகளுக்கு மட்டுமே, தலா 200 ரூபாய் வீதம் தினசரி 25 லட்சத்தை இறைத்திருக்கிறாராம் வைத்தி. இதற்காக தினமும் 200 ரூபாய் நோட்டுகளை தடையின்றி தருவித்துக் கொடுக்க, வங்கி மேலாளர் ஒருவருக்கு தினமும் ஒரு லட்ச ரூபாய் கமிஷன் வெட்டியதாம் வைத்திலிங்கம் தரப்பு. இதனிடையே, வைத்தியை தோற்கடிக்க பக்கத்து மாவட்டங்களின் பவர்ஃபுல் அமைச்சர்கள் இரண்டு பேர், தங்களது ஒற்றர் படைகளை தொகுதிக்குள் அனுப்பினார்களாம்.
மக்கள் கூடும் இடங்களில் நின்று வைத்திக்கு எதிரான கருத்துகளை விதைப்பது, சமூக வலைதளங்களில் வைத்திக்கு எதிரான வில்லங்க செய்திகளை பரப்புவது இதுதான் அந்த ஒற்றர்படைக்கு தரப்பட்ட அசைன்மென்டாம். இதைக் கொஞ்சம் தாமதமாக கண்டுபிடித்த வைத்தியின் மகன், ஒற்றர் படையை அங்கிருந்து துரத்திவிட்டதுடன், வேறு யாராவது தொகுதிக்குள் சுற்றுகிறார்களா என கண்டுபிடிக்க தனது விசுவாசிகள் சிலரை தொகுதிக்குள் சுற்ற விட்டது தனிக்கதை.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.