எலெக்‌ஷன் கார்னர்: பணிவுகாட்டிய துரை வையாபுரி!

எலெக்‌ஷன் கார்னர்: பணிவுகாட்டிய துரை வையாபுரி!
Updated on
1 min read

மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்காக, வைகோவின் மகன் துரை வையாபுரி கடந்த வாரம் பொங்கலூர் வந்தார். கோவை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உள்ளிட்ட சீனியர்கள் அவரை வரவேற்க திரண்டிருந்தனர்.

அதையெல்லாம் பார்த்துவிட்டு நெகிழ்ந்த துரை, “என் தந்தையைவிட வயதில் மூத்தவர்களான நீங்கள் எல்லாம் என்னை வரவேற்க இப்படி இனி நிற்க வேண்டாம்” என்று சொன்னாராம். கூட்டத்தில் பேசும்போதும், “திமுக கடந்த ஓராண்டாக இந்தத் தொகுதியில் தீவிர களப்பணி செய்துள்ளது. இருப்பினும் அவர்கள் நமக்கு இந்தத் தொகுதியை வழங்கியது அவர்களின் பெருந்தன்மை.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. வாய்ப்புக் கிடைக்காத போதும் கிடைத்தவர்களுக்காக தேர்தல் பணி செய்வது உயர்ந்த பண்பு. அத்தகைய பண்புள்ளவர்களுக்கு மதிமுகவில் நல்ல எதிர்காலம் உண்டு” என்று தந்தையை மிஞ்சிய தனயனாகப் பேசி அசத்தினார் துரை.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in