

1991-ல் இருந்து சங்கரன்கோவில் தனி தொகுதியை தன்வசம் வைத்திருக்கிறது அதிமுக. அமைச்சர் ராஜலட்சுமி இரண்டாவது முறையாக மீண்டும் இங்கு களத்தில் நிற்கிறார். அவர் சாந்தமாக இருந்தாலும் அவரது பெயரைச்சொல்லி கணவர் முருகன் ரொம்பவே ஆடிவிட்டாராம்.
அதனால் விளைந்த அதிருப்தியால், சில கிராமங்களுக்குள் ஓட்டுக்கேட்டுச் செல்ல முடியாமல் தவித்தார் ராஜலட்சுமி. இதுவரை ராஜலட்சுமியை அரசியல் ரீதியாக எதிர்த்த நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது, பிசிஆர் கேஸ் கொடுத்து பழிதீர்த்திருக்கிறாராம் முருகன். இதனால் பாதிக்கப்பட்ட மாற்று சமூகத்தினர் பலரும் அதிமுகவைவிட்டு விலகி, இப்போது அமமுக பக்கம் நிற்கிறார்கள்.
இதனால், நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாத அவஸ்தையில் தவித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜலட்சுமி. “அம்மாவை இம்முறை பட்டுவாடாக்கள் காப்பாற்றினால் தான் உண்டு” என்று அவரது ஆதரவாளர்களே அலாரம் அடிக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.