

மார்ச் 30-ம் தேதி ராஜபாளையத்தில், “ரவுடி அமைச்சர்” என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை விளாசிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அப்போது சிவகாசியில் ‘அகில இந்திய பட்டாசு உற்பத்தியாளர் சங்க (டான்ஃபாமா)’ நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார் கேடிஆர்.
அந்தச் சந்திப்பின் போது, “நீங்கள் என்னிடம் கொண்டு வந்த கோரிக்கைகளை எல்லாம் என்னால் முடிந்தவரைக்கும் செய்து கொடுத்திருக்கிறேன். அந்த ஆண்டாள் புண்ணியத்தில் என்னிடம் கைநிறையக் காசு இருப்பதால் நான் எதற்காகவும் உங்களிடத்தில் பணம் காசு கேட்டதில்லை. சிவகாசி தொகுதியை விட்டுட்டு நான் ராஜபாளையத்துக்குப் போனதே இந்தத் தொகுதியில் நாடார் சமூகத்துக்கும் பிரநிதித்துவம் கிடைக்கணும்கிறதுக்காகத்தான்.
எனவே, சிவகாசியில் போட்டியிடும் உங்கள் சமூகத்துப் பிள்ளையான தனலெட்சுமியை நீங்கள் தான் கைதூக்கிவிடணும். மறுபடியும் எடப்பாடியார் தான் முதல்வர்; மோடிதான் பிரதமர்ங்கிறத மறந்துடாதீங்க” என்று கைகூப்பி கேட்டுவிட்டு வந்தாராம் கேடிஆர்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.