எலெக்‌ஷன் கார்னர்: கேட்காமலே கொடுக்கும் கேடிஆர்!

எலெக்‌ஷன் கார்னர்: கேட்காமலே கொடுக்கும் கேடிஆர்!
Updated on
1 min read

தொண்டாமுத்தூரில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆட்கள் ‘கூகுள் பே’ மூலமாக 6,000 வாக்காளர்களுக்கு மணி டிரான்ஸ்ஃபர் செய்து சிக்கிக் கொண்டார்கள். ராஜபாளையத்தில் போட்டியிடும் ‘டாடி புகழ்’ அமைச்சர் கே.டி.ரஜேந்திர பாலாஜி, அதுமாதிரி எல்லாம் யோசிக்கவில்லை.

தினகரன் பாணியில் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொகுதிக்குள் உள்ள குறிப்பிட்ட சில, பலசரக்குக் கடைகளுடன் அமைச்சர் தரப்புக்கு டீல் இருக்கிறது. அந்தக் கடைகளின் பெயரில் வாக்காளர்களுக்கு ரசீது ஒன்றை வழங்கி வருகிறது கேடிஆர் தரப்பு. அதைக் கொண்டு போய் சம்பந்தப்பட்ட கடைகளில் கொடுத்தால், ரொக்கமாகவோ அல்லது அதற்கு சமமான மதிப்பில் மளிகைப் பொருட்களோ வாங்கிக் கொள்ளலாமாம்.

டோக்கன் பெற்றவர்கள் இப்போதே பலசரக்குக் கடைகளை மொய்ப்பதால், வில்லங்கத்தில் சிக்கிவிடுவோமோ என பலசரக்கு அண்ணாச்சிகள் அரண்டு போய்க் கிடக்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in