Last Updated : 03 Apr, 2021 10:25 PM

 

Published : 03 Apr 2021 10:25 PM
Last Updated : 03 Apr 2021 10:25 PM

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கரோனா

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு பாஜக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு இன்று இரவு கரோனா தொற்று உறுதியானது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அண்மையில் இணைந்தார்.

தற்போது பாஜகவில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். தேர்தல் பிரச்சாரம் செய்துவந்த அவருக்கு உடல்நலம் இன்று குன்றியது.

பரிசோதனை செய்து பார்த்தபோது கரோனா தொற்று உறுதியானது.

மருத்துவர்கள் அறிவுறுத்தல் அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னை சந்தித்த அனைவரையும் தொற்று பரிசோதனை செய்து கொள்ள கோரிக்கை விடுத்துஉள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x