Published : 03 Apr 2021 10:46 AM
Last Updated : 03 Apr 2021 10:46 AM

ஹாட் லீக்ஸ்: வேதாரண்யம்... வேட்டுவைக்கும் ஜெயபால்!

நாகப்பட்டினம்

முன்னாள் அமைச்சர் ஜெயபால் கடந்த முறையே தனக்கு நாகப்பட்டினம் சீட் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு தள்ளிவிட்டது அதிமுக தலைமை. இதில், மாவட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ‘சிறப்பான’ சேவையும் உண்டு என அப்போதே பேச்சுக் கிளம்பியது.

இம்முறையும் ஆவலோடு காத்திருந்தார் ஜெயபால். ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு தனது ஆதரவாளரான தங்க.கதிரவனை வேட்பாளராக திணித்துவிட்டாராம் ஓஎஸ்எம். இதனால் கடுப்பான ஜெயபால், “எனது அரசியல் வாழ்க்கையையே அஸ்தமிக்கவைத்து விட்ட ஓ.எஸ்.மணியனின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்டாமல் நான் ஓயமாட்டேன்” என்று சொல்லி களத்தில் இறங்கி இருக்கிறாராம்.

இது தொடர்பாக தனது ஆதரவாளர்களை அழைத்து ரகசியக் கூட்டம் போட்ட ஜெயபால், “எப்பாடுபட்டாவது, எவ்வளவு செலவு செய்தாவது வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியனை தோற்கடிக்க வேண்டும்” என்று சபதமே போட்டிருக்கிறாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x