

சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பை எல்லாம் மீறி கடும் போராட்டத்துக்கு நடுவே மீண்டும் விளவங்கோடு சீட்டை வாங்கினார் காங்கிரஸ் எம்எல்ஏ-வான விஜயதரணி. ஆனாலும் அவருக்கு சிக்கல் தீர்ந்தபாடில்லை.
இவரை எதிர்த்து காங்கிரஸின் மாநில துணைத்தலைவர் சாமுவேல் ஜார்ஜ், தொழிற்சங்க நிர்வாகி ஆமோஸ் ஆகியோர் போட்டி வேட்பாளர்களாக களத்தில் இறங்கினார்கள். இதையடுத்து இருவரையும் கட்சியிலிருந்து நீக்கினார் கே.எஸ்.அழகிரி. ஆனாலும் ஆர்ப்பாட்டம் குறையவில்லை. சாமுவேல் ஜார்ஜ் தொகுதிக்குள் சொந்த செல்வாக்குடன் வலம் வரும் மருத்துவர் என்பதால் விஜயதரணிக்கு கடும் குடைச்சல் கொடுக்கிறார்.
“விளவங்கோடு காங்கிரஸை விஜயதரணியிடமிருந்து மீட்கவே தனித்துப் போட்டியிடுகிறேன்” என்று விவகாரமாய் பிரச்சாரம் செய்கிறார் மருத்துவர். காங்கிரஸ்காரர்கள் தான் யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.