

கமல் வெற்றி பெற்றால் கோவை தெற்கு தொகுதி தரம் உயர்த்தப்படும் என்று ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ஸ்ரீபிரியா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “கமல் வெற்றி பெற்றால் கோவை தெற்கு தொகுதி தரம் உயர்த்தப்படும். அவர் சிறப்பாகப் பணியாற்றுவார். கோவை தெற்கு தொகுதியை இந்தியாவின் முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவார்.
கமல் சினிமாவில் நடிக்கும்போது உயிரைக் கொடுத்து நடிப்பார். சினிமா வேறு அரசியல் வேறு என்று வசனம் பேசுபவர்களை நம்பாதீர்கள். ஒரு மனிதனின் சிறப்பு அவர் செய்யும் வேலையில், அவர் காட்டும் நாணயத்தில் உள்ளது” என்று ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
ஸ்ரீபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.