

தஞ்சையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அமமுக தலைமையிலான கூட்டணியில் 60 இடங்களில் போட்டியிடுகிறது. கட்சியின் நட்சத்திர வேட்பாளராக பிரேமலதா விருத்தாசலத்தில் களம் காண்கிறார்.
கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
பேச இயலாவிட்டாலும், சைகையால் கையசைத்தும், முரசு கொட்டுவதுபோல் செய்துகாட்டியும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். விஜயகாந்த் ஒவ்வொரு இடத்திலும் 5 நிமிடங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தாலும் கூட அக்கட்சியினர் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமநாதன் மற்றும் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் முத்து. சிவகுமார் ஆகியோருக்கு கொட்டும் முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு நேற்று இரவு தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை சந்திப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .
சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே விஜயகாந்த் வாக்காளர்கள் மத்தியில் கையை அசைத்தபடியும், கும்பிட்டபடி வாக்கு கேட்டுச் சென்றார்.