பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை நமீதா.
பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகை நமீதா.

இலவச சிலிண்டரில் பிரியாணி செய்யலாம்; கேபிளில் நாடகம் பார்க்கலாம்: நடிகை நமீதா பேச்சு

Published on

பொதுமக்கள் அரசு வழங்கும் இலவச சிலிண்டரில் பிரியாணி செய்து சாப்பிட்டுவிட்டு, கேபிளில் நாடகம் பார்க்கலாம் என்று நடிகை நமீதா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வல்லம் புதூரில் நடிகை நமீதா இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது நமீதா பேசுகையில், ''திமுக சுயமரியாதை இல்லாத கட்சி, பெண்களை மதிக்காத கட்சி. 2ஜி புகழ் ஆ.ராசா, முதல்வர் பழனிசாமியின் அம்மாவைப் பற்றி இழிவாகப் பேசியது அதற்கு உதாரணம். எனவே, திமுகவைத் தோற்கடிக்க வேண்டும். வரும் தேர்தல் மூலம் தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை எனப் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். வருடத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ரூபாய் பணம், இலவச கேபிள் இணைப்பு ஆகியவை வழங்கப்படும்.

பொதுமக்கள் அரசு வழங்கும் இலவச கேஸ் சிலிண்டரில் நன்றாக பிரியாணி செய்து சாப்பிட்டுவிட்டு, அரசின் இலவச கேபிளில் நாடகம் பார்க்கலாம். ஆனால், வெஜ் பிரியாணி செய்தால் எனக்குக் கொடுங்கள். ஏனென்றால் நான் சைவம்தான் சாப்பிடுவேன்'' என்று நமீதா தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in