

இந்தத் தேர்தலில் திமுகவைக் கதம் கதம் கதம் செய்வோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டவர்வர்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, “நானும் ரஜினி ரசிகன்தான். ரஜினியின் நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு நானும் அவர் ரசிகராகப் பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ரஜினி மற்றவர்களை மதிப்புடன் நடத்துவார். எம்ஜிஆருக்கு அடுத்து ஒப்பற்ற பண்பைக் கொண்டவர் ரஜினி.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைக் கதம் கதம் கதம் செய்வோம். இந்தத் தேர்தலில் இருந்து எந்தக் கட்சியிலும் வாரிசு அரசியலே இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.