ஹாட் லீக்ஸ்: ஒரத்தநாடு... ஒரு கிராம் தங்கக் காசு!
கடந்த முறை ஒரத்தநாட்டில் திமுகவிடம் தோற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். இங்கு திமுக வேட்பாளர் ராமச்சந்திரனைவிட அமமுக வேட்பாளர் மா.சேகர் தான் வைத்தியை ரொம்பவே மிரட்டிப் பார்க்கிறாராம்.
தனது சொந்த செல்வாக்கில் சுமார் 40 ஆயிரம் ஓட்டுகளை சேகர் தட்டிக்கொண்டு போகலாம் என்பதால், இம்முறை தொகுதி மாறி போட்டியிடும்படி ஆதரவாளர்கள் அலாரம் அடித்தார்களாம். ஆனால், “சொந்தத் தொகுதியை விட்டு இன்னொரு தொகுதிக்கு ஓடிட்டாருன்னு கேவலமா பேசுவாங்கப்பா... என்ன ஆனாலும் பரவால்ல இங்கேயே நிற்போம்” என்று சொல்லிவிட்டாராம் வைத்தி.
இப்போது கவுரவமான ஓட்டுவாங்கவே போராடும் வைத்தி, ஓட்டுக்கு ஒரு கிராம் தங்கக் காசு கொடுக்கும் யோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
