எலெக்ஷன் கார்னர்: பால் கண்ணன்... பலே கண்ணன்!
நெல்லை தொகுதியில் அமமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார் பால் கண்ணன். யாதவர் சமூகத்தைச் சேர்ந்த இவர் தீவிர பிரச்சாரம் செய்தால் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆபத்து என பேசப்பட்ட நிலையில், பால் கண்ணன் தனது வேட்பு மனுவை முன்மொழிந்த பத்து பேரில் இருவரை தொகுதிக்கு வெளியிலிருந்து சேர்த்திருந்தார்.
இதைக் காரணம்காட்டி அவரது வேட்பு மனு தள்ளுபடி ஆனது. “இது கவனக்குறைவால் நடந்த விஷயமில்லை... ஏற்கெனவே நயினார் அதிமுகவில் இருந்தபோது அவரது விசுவாசியாக இருந்தவர் பால் கண்ணன். அந்த விசுவாசத்தை மறக்காமல் வேண்டியதை வாங்கிக் கொண்டு தந்திரமாக போட்டியிலிருந்து ஒதுங்கிவிட்டார் பால் கண்ணன்” என்கிறார்கள்.
இருந்தாலும் பால் கண்ணனுக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த மகேஷ் கண்ணன் இப்போது அமமுக வேட்பாளராக களத்தில் நிற்கிறார்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.
