Last Updated : 30 Mar, 2021 09:17 PM

 

Published : 30 Mar 2021 09:17 PM
Last Updated : 30 Mar 2021 09:17 PM

பிரதமர் மோடியின் ஒருபக்கம் மாமனார், மறுபுறம் மருகமன்: புதுச்சேரி பிரச்சாரக் கள சுவாரஸ்ய துளிகள்

புதுச்சேரிக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி வந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று மோடி வந்தார். பிரச்சாரக் களத்தில், பிரதமரின் இருபுறமும் மாமனார், மருமகன் அமர்ந்திருந்தது, தடையை மீறி வானில் பட்டம் பறக்கவிடப்பட்டது எனப் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.

புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மில் திடலில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் வெயிலில் வாடாமல் இருக்க உயரமான மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.

மேடையில் வேட்பாளர்கள் அமர இருக்கை போடப்பட்டிருந்தது. காரைக்கால் அதிமுக வேட்பாளர் அசனா கரோனா தொற்று காரணமாக விழாவுக்கு வரவில்லை.

விமான நிலையத்திலிருந்து நகரின் முக்கிய சாலைகள் வழியாக கடற்கரை அழகை ரசித்தபின் பிரதமர் மோடி விழா மேடைக்கு வந்தார்.

* புதுச்சேரி, காரைக்காலில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பஸ், வேன்களில் வந்திருந்தனர்.மதியமே தொண்டர்கள் வந்ததால் அவர்களை மகிழ்விக்க பாரம்பரிய தமிழ் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தன.

* பிரதமர் வந்த பாதையெங்கும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புஸ்ஸி வீதி உள்பட பலஇடங்களில் கடைகள் நேற்று மூடப்பட்டன.

* மைதானம் வந்தவர்கள் முழுமையாக பரிசோதனை செய்து அனுப்பப்பட்டனர். இதனால் அவர்கள் உள்ளே வர காலதாமதம் ஆனது. மாநில தலைவர் சாமிநாதன் போலீஸார் கெடுபிடிகளை குறைத்து உள்ளே அனுமதிக்கும்படி மைக்கில் அறிவித்தப்படி இருந்தார்.

* அதிமுக வேட்பாளர்கள் ஒன்றாக மேடைக்கு வந்தனர். பிரதமர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார். பிரதமர் வரும் சிறிது நேரத்துக்கு முன்பாகதான் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தனர்.

மேடையில் அமர்ந்த வேட்பாளர்கள், கட்சியினருக்கு முகக்கவசம் புதிதாக தரப்பட்டது. அதை அணியாமல் இருந்தோரிடம் கண்டிபாக அணிய அதிகாரிகள் அறிவுறுத்தினர். ரங்கசாமி பிரதமர் வந்தபோதுதான் புதிய முககவசத்தை அணிந்தார்.

* தொண்டர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, முகக்கவசம் அளிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டனர்.

* பொதுக்கூட்ட மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் உயரமான கட்டிடங்களில் போலீஸாரும், துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

* பிரதமர் வருகையோட்டி ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் பேசும்போது இரு பட்டங்கள் மேடையின் மேலே பறந்தன. இதையடுத்து பட்டத்தை இறக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி நடுவே அமர ஒருபக்கம் மாமனார் ரங்கசாமியும். மறுபக்கம் அவரது மருமகன் நமச்சிவாயமும் அமர்ந்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x