எலெக்‌ஷன் கார்னர்: முந்திக்கொள்ளுமோ மூர்த்தியின் கீர்த்தி?

எலெக்‌ஷன் கார்னர்: முந்திக்கொள்ளுமோ மூர்த்தியின் கீர்த்தி?
Updated on
1 min read

மதுரை கிழக்கில் பி.மூர்த்திதான் வெற்றிபெறுவார் என்பது திமுகவினரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கிறார் அதிமுகவேட்பாளர் கோபாலகிருஷ்ணன். மு.க.அழகிரியின் முன்னால் ஆதரவாளரான மூர்த்தியின் வில்லங்க கல் குவாரிகள் உள்ளிட்டவை குறித்து வீதிக்கு வீதி நின்று விளக்கு வைத்துக் கொண்டிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்.

போதாக்குறைக்கு, இங்கு பிரச்சாரத்துக்கு வந்த ஈபிஎஸ், “நம் வேட்பாளர் ரொம்ப அமைதியானவர். திமுக வேட்பாளர் எப்படிப்பட்டவர்னு உங்களுக்கே தெரியும். அவர் வீடு புகுந்து ஒரு குடும்பத்தைத் தாக்கிய காட்சியை சமீபத்தில் டிவியில் பார்த்திருப்பீங்க. நீங்க நிம்மதியாக வாழணும், அமைதியா தொழில் பண்ணணும்னு நினைச்சீங்கன்னா அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்க” என்று மூர்த்தியை பஞ்சராக்கி விட்டுப் போனார்.

இதையெல்லாம் எதிர்பார்க்காத மூர்த்தி, “ஜெயிச்சாலும் இந்த வெவகாரத்தை எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டு நம்மள அமைச்சராக்காம விட்டுருவாங்களோ” என்று நெருங்கிய வட்டத்தினரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in