Published : 30 Mar 2021 08:13 am

Updated : 30 Mar 2021 08:13 am

 

Published : 30 Mar 2021 08:13 AM
Last Updated : 30 Mar 2021 08:13 AM

காரைக்குடிக்கு விமானநிலையம் உறுதி: தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக

bjp-rolls-out-manifesto-for-karaikudi
காரைக்குடியில்  அத்தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, நடிகை காயத்ரி ரகுராம்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதிக்கு பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவும், நடிகை காயத்திரி ரகுராமும் தனியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த அறிக்கையில், காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சட்டக் கல்லூரி கொண்டு வரப்படும்.


கோட்டையூர் ஸ்ரீராம்நகருக்கு ரயில்வே மேம்பாலம், காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை, செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும்.

அரசு மருத்துவமனைகளின் தரம் மேம்படுத்தப்படும். தேவகோட்டையில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

மருதுசகோதரர்கள், வீரன்அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகுமுத்தரையர் ஆகியோருக்கு சிலைகள் அமைக்கப்படும். இளைஞர்கள் மேம்பாட்டிற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிற்பூங்கா அமைக்கப்படும். சுய சார்பு மாதிரி கிராமங்களை உருவாக்கப்படும்.

காரைக்குடி-சென்னை இடையே இரவு நேர ரயில் கொண்டு வரப்படும். இயற்கை வேளாண்மை மாதிரி கிராமம் உருவாக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தவறவிடாதீர்!



காரைக்குடி தொகுதிதேர்தல் அறிக்கைஹெச்.ராஜாகாயத்திரி ரகுராம்One minute news

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x