

உடுமலைபேட்டையில் அமைச்சர் ராதாகிருஷ்ணனை எதிர்த்து தென்னரசுவை நிறுத்தி இருக்கிறது காங்கிரஸ். “அமைச்சர்களை எதிர்த்து நாங்களே போட்டி யிடுவோம்” எனச் சொல்லிக் கொண்டிருந்த திமுக, காங்கிரஸுக்கு இந்தத் தொகுதியைக் கொடுக்க முடியாது என பிடிவாதமாக இருந்ததாம்.
ஆனாலும் காங்கிரஸ் தலைகள் மல்லுக்கட்டி இந்தத் தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறார்கள். திமுக நின்றால் ஜெயிப்பது சிரமம் என்பதால் தொகுதியை காங்கிரஸுக்கு நகர்த்த அமைச்சர் ராதாகிருஷ்ணன் தரப்பிலும் ரொம்பவே மெனக்கிட்டார்களாம். அவர்களது பிளான்படியே தொகுதி காங்கிரஸுக்கு கிடைத்துவிட்டது.
இதன் பின்னணியில் திரைமறைவு பேரங்கள் நடந்ததாகவும் காங்கிரஸுக்குள்ளேயே இப்போது புகைச்சல் கிளம்பி இருக்கிறது. இதற்கே வெற்றிக் களிப்பில் இருக்கிறதாம் அமைச்சர் தரப்பு!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.