

எடப்பாடி பழனிசாமியை அவரது சொந்த மண்ணிலேயே தோற்கடிப்போம் என்று சூளுரைத்த ஸ்டாலின், எடப்பாடியாரை எதிர்த்து சாமானியரான சேலம் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் சம்பத்குமாரை நிறுத்தி இருப்பது திமுகவுக்குள்ளேயே அதிருப்தி அலைகளை ஓடவிட்டிருக்கிறது.
இதனிடையே, வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சம்பத்குமாரை அழைத்து தனது பாணியில் பேசிய துரைமுருகன், “தம்பி... எடப்பாடியை எதிர்த்து நிக்கிறதே பெருமையான விஷயம்தான். ஜெயலலிதாவை எதிர்த்த சாமானியர் சுகவனமெல்லாம் எம்பி ஆகலையா... அது மாதிரி உங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு.
பெரிய ஆளை எதிர்த்து நிக்கிறோம்; கட்சியிலருந்து பணம் குடுப்பாங்கனு எல்லாம் பெருசா எதிர்பார்த்துடாதீங்க. ‘சீட் குடுத்தா 5 கோடி செலவு பண்ணுவேன்’னு சொல்லிருக்கீங்கல்ல... அதை செலவழிங்க; பார்க்கலாம்” என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.