

கமல் களத்தில் நிற்பதால் கோவை தெற்கில் பாஜகவும் காங்கிரஸும் எக்ஸ்ட்ரா கலக்கத்தில் இருக்கின்றன. யாருடைய ஓட்டுகளை இவர் இழுப்பார் என்று பிடிபடாத நிலையில், காங்கிரஸ் வேட்பாளரான மயூரா ஜெயக்குமார் அதிருப்தி காங்கிரஸ் தலைகளையும் வம்படியாய் அழைத்துவந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.
“பாஜக வேட்பாளர் வானதி ஜெயித்தால் டெல்லிக்குப் போய்விடுவார். கமல் ஜெயித்தால் அவர் நடிகர் நடிக்கப் போய்விடுவார். சென்னைக்கு அவரது வீட்டுக்குப் போனால்கூட அவரை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், நான் அப்படியில்லை. இந்தக் தொகுதிக்குள்ளேயே இருப்பவன்; உங்களுக்காக வேலை செய்பவன்.
என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்க முடியும்; உங்கள் கோரிக்கைகளை என்னிடம் சொல்லமுடியும்” என்று மயூரா பிரச்சாரம் செய்வதை கதர்பார்ட்டிகளே ஒரு மார்க்கமாய்த்தான் பார்க்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.