எனது பிரச்சாரத்தை முடக்கத் திட்டம்: பிரேமலதா குற்றச்சாட்டு

எனது பிரச்சாரத்தை முடக்கத் திட்டம்: பிரேமலதா குற்றச்சாட்டு
Updated on
1 min read

தனது பிரச்சாரத்தை முடக்கத் திட்டமிடப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

கரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரும், நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரேமலதா.

அப்போது அவர் வாக்காளர்களிடம், ”எனது பிரச்சாரத்தை முடக்க திட்டமிடுகின்றனர். அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். கரோனா பரிசோதனை முடிவு சாதகமாகத் தான் இருக்கும். கட்சியினர் பத்து பேர் கொண்டு குழு அமைத்து வீடு வீடாக வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி ஒன்று தான் நமது இலக்கு’' என்றார்.

பின்னர், இரவு அவர் தங்கியிருந்த வளாகத்திற்கு சென்ற விருத்தாசலம் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சுகந்தி ஆகியோர், நாளை ( இன்று) பரிசோதனை முடிவு வரும்வரை பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டாம் என்பதை வலியுறுத்தும் கடிதத்தை தேமுதிக வழக்கறிஞர் மணியிடம் வழங்கினர்.

அப்போது அவர்கள் பரிசோதனை முடிவு வரும்வரை பிரச்சாரம் செய்வதை முடக்கவேண்டாம் எனப் பதில் அளித்தனர். இதையடுதத்து மருத்துவ அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in