ஹாட் லீக்ஸ்: ஸ்டன்ட் வித் வைத்திலிங்கம்!

ஹாட் லீக்ஸ்: ஸ்டன்ட் வித் வைத்திலிங்கம்!
Updated on
1 min read

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பனுக்கு மறுத்துவிட்டு கோபிநாதன் என்பவருக்கு பாபநாசம் சீட்டைக் கொடுத்துவிட்டது அதிமுக. இதையடுத்து, “கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தைத் தோற்கடிப்போம்” என்று கறுவிக் கொண்டிருக்கிறாராம் ஐயப்பன்.

இதனிடையே, கடந்த 17-ம் தேதி பாபநாசம் தொகுதிக்கு முதல்வர் பிரச்சாரத்துக்கு வந்தபோது, தனக்குப் பின்னால் ஆயிரம் பேரை திரட்டி நிற்கவைத்து அவர்களை எல்லாம் ‘ஸ்டாண்ட் வித் ஐயப்பன்’ என்று கோஷம் போட வைக்க ஏற்பாடு செய்திருந்தாராம் ஐயப்பன். இதைக் கேள்விப்பட்டு பதறிய வைத்திலிங்கம்,

அவரை அழைத்துப் பேசி, “தேர்தல் முடிந்ததும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க ஏற்பாடு செய்வது எனது பொறுப்பு” என்று உத்தரவாதம் அளித்து அவரை பின்வாங்க வைத்தாராம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in